Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குடியரசு தினத்தன்று வெளியாகும் வீரமே வாகை சூடும்

On December 27, 2021
Veerame V Sudum
Share

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடித்துள்ள படம் “வீரமே வாகை சூடும்".

அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில், விஷாலின் மாறுப்பட்ட நடிப்பில், அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டத்தை களமாக கொண்டு உருவாகியுள்ளது இப்படம். இப்படத்தின் டீசர் 25.12.2021 அன்று வெளியானது. வெளியான நொடியிலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில், இணையத்தில் வைரலாக பரவியது. 5 மணிநேரத்தில் இப்படத்தின் டீசர் 1 மில்லியன் பார்வைகளை கடந்தது.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். புதுமுக இயக்குனர் து.ப.சரவணனன் எழுதி இயக்குகிறார்.

முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர்.

கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்கிறார்.

இப்படத்தின், இசைகோர்ப்பு வேலைகள் நடந்து வருகிறது. வரும் குடியாரசு தினம் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டு 5 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.