Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குடிபோதையில் சொந்த மகனை சுட்டு கொன்ற தந்தை !

On July 29, 2017
thuppaakki
Share
thuppaakki உ.பி.யில் குடிப்பழக்கத்தால் நடந்த ஒரு கொலை சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள ரிகுண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திரேந்திரா. இவரின் தந்தை மன்மோகன் லோதி குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். மகன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் குடிப்பழக்கத்தை விடவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று மன்மோகனிடம் அவரது மகன் திரேந்திரா குடிப்பழக்கத்தை நிறுத்த சொல்லி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மன்மோகன் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து திரேந்திராவை சரமாரியாக சுட்டார். இதில் படுகாயமடைந்த திரேந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் டிஐஜி கூறுகையில், ‘மன்மோகன் லோதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அவருடைய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திரேந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது’ என தெரிவித்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.