Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குஜராத் மாநிலத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் மரணம்!!

On October 27, 2017
Killing-PTI-L
Share
Killing-PTI-L பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் டாகோட் மாவட்டத்தில் உள்ள டெசில் கிராமத்தில் ஒரு வழக்கு விசாரணைக்காக அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த நபர் காவல்நிலையத்தில் மர்மமாக முறையில் மரணம் அடைந்துள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த உள்ளூர் மக்கள் பலரும் இந்த மரணத்துக்கு நீதி கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கும்பலைக் கலைக்க போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதனால் குண்டு பாய்ந்து ஒருவர் மரணம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் மேலும் பரபரப்பு சூழல் உண்டாகி பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான தகவல் ஏதும் வரவில்லை. போலீஸ் தரப்பில் கூடியுள்ள மக்கள் கல்வீசி போலீசாரைத் தாக்கியதாகவும் அதைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.