Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக இருக்கிறது உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் எழில் கூட்டணியில் உருவாகி வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படம்

On August 23, 2016
IMG_0415
Share
IMG_0415 உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் எழில் கூட்டணி அமைத்திற்கும்  திரைப்படத்தின் படப்பிடிப்பானது, ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது திட்டமிட்டது போல் இந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பானது இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பானது காரைக்காலிலும்  அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் வெளியான 'மனிதன்' மற்றும் எழில் இயக்கத்தில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி வணீக ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் அமோக வெற்றி பெற, தற்போது இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த பெயர் சூட்டப்படாத திரைப்படத்தின் உரிமையை வாங்க பல விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது என்பதை வெகுவாக சொல்லலாம். கோயம்பத்தூர் 'கந்தசுவாமி கலை கூடத்தின்' ராஜமன்னார், தற்போது இந்த படத்தின் விநியோக உரிமையை குறைந்தபட்ச உத்தரவாத அடிப்படையில் வாங்கி இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். இப்படி படப்பிடிப்பு ஆரம்பித்த முதல் நாளே விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு கொண்டு இந்த படத்தின் உரிமையை வாங்க விருப்பம் காட்டி வருவதால், கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற தேவையான எல்லா குணங்களும் இந்த படத்தில் இருக்கும் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.முழுக்க முழுக்க காமெடி களஞ்சியமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படமானது வருகின்ற கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.