கிரைம் கலந்த நகைச்சுவை படமாக வருகிறது கடைசீல பிரியாணி

YNOT ஸ்டுடியோஸின் ஒரு அங்கமான YNOTX ‘கடைசீல பிரியாணி’ எனும் கிரைம்-நகைச்சுவை படத்தை பெருமையுடன் வெளியிட உள்ளது.
YNOTX வழங்கும் ‘கடைசீல பிரியாணி’ ஒரு மேஸ்ட்ரோஸ் & பனோரமாஸ் தயாரிப்பு.
நிஷாந்த் கலிதிண்டி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், விளம்பரத் திரைப்படங்கள் மற்றும் இசை ஆல்பங்களை இயக்கியவர்.
இப்படத்தில் வசந்த் செல்வம், ஹக்கிம் ஷா, விஜய் ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்
அறிமுக இசையமைப்பாளர்களின் குழு இந்த படத்திற்கு இசையமைக்கிறது. இசையை ‘YNOT மியூசிக்’ வெளியிட உள்ளது. இதை பற்றிய அறிவிப்பு பின்னர் வரும்.
இது குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான S.சசிகாந்த் கூறுகையில்,
“சூப்பர் டீலக்ஸ், பக்கிரி, கேடி மற்றும் வானம் கொட்டட்டும் போன்ற படங்களை தொடர்ந்து, சுயாதீனமாக தயாரிக்கப்பட்ட ‘கடைசீல பிரியாணி’ YNOTX-இன் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் நிஷாந்த் கலிதிண்டி கவனிக்கப்பட வேண்டிய ஒரு திறமைசாலி ஆவார். மேலும், மிக பிரம்மாண்டமான வெளியீட்டிற்கு இந்த படம் தகுதியானது, அதை திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
இயக்குநர் நிஷாந்த் கலிதிண்டி கூறுகையில்,
“பழிவாங்குவதற்காக கேரளாவுக்குச் செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பற்றிய கதை தான் ‘கடைசீல பிரியாணி’. இந்த தமிழ் படம் கேரளாவில் உள்ள அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் வெளியான முந்தைய படங்களைப் போலல்லாமல், இது ஒரு தனித்துவமான சுவாரசியமான கதையுடன் கூடிய படமாக இருக்கும்" என்று கூறினார்.
‘கடைசீல பிரியாணி’ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
நிஷாந்த் கலிதிண்டி இயக்கி, தயாரித்துள்ளார். S. சசிகாந்த் & சக்ரவர்த்தி ராமச்சந்திரா ஆகியோர் தயாரித்துள்ளனர்
அஜீம் மொஹம்மத் மற்றும் ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இக்னேசியஸ் அஸ்வின்
படத்தொகுப்பு செய்துள்ளார்.
‘கடைசீல பிரியாணி’ திரைப்படத்தை அக்டோபர் 2021-இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
