கிரிக்கெட் வீரராக நடிக்கும் ரன்வீர் சிங்...

ரன்வீர் சிங் ஒரு திறமையான நடிகர், அவர் 'பத்மாவத்', 'கல்லி பாய்', 'பாஜிராவ் மஸ்தானி' மற்றும் 'ராம் லீலா' போன்ற வெற்றி படங்களை தந்தவர், இவர் சமீபத்திய காலங்களில் மிகச்சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது தோற்றங்கள் மற்றும் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அளவுக்கு அமைந்திருக்கும். இவரது கதாபாத்திரம் இவர் நடித்த மற்ற படங்களை விட மாறுபட்டவையாக அமைந்திருக்கும், ஆகையால் தான் இவரால் அடுத்தடுத்து வெற்றி படங்களை தர முடிந்தது.
83' படத்தில் ரன்வீரின் தோற்றம் ஒரு கிரிக்கெட் வீரர், அவர் அதற்கேற்ப தன்னை உருவகப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் இவர் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரும் 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவருமான கபில் தேவ் ஆக நடிக்கிறார். படத்தில், ரன்வீர் சரியாக கபிலைப் போலவே காட்சி அளிக்கிறார், இந்த படம் நிச்சயமாக அதீத வரவேற்பை பெரும்! அவரது முதல் தோற்றம் நிச்சயமாக பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும், இது 2020 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.
ரன்வீர் நடிக்கும் இந்த படத்தை கபீர் கான் இயக்குகிறார். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை விஷ்ணு வர்தன் இந்துரி, சஜித் நதியட்வாலா மற்றும் மது மன்டெனா தயாரிக்கின்றனர். இவர்கள் வரிசையில் தீபிகா படுகோனேவும் இந்த படத்தை தயாரிக்கிறார்.
கபீர் கான் இயக்கிய 83, படம் ஏப்ரல் 10,2020 அன்று வெளியாகவுள்ளது .
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
