Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கிடாரி - குற்றமே தண்டனை - இளமை ஊஞ்சல் வசூல் நிலவரம் - கலவரம்

On September 4, 2016
movie-theater-1
Share
movie-theater-1 வெள்ளிக்கிழமை (2.9.2016 ) அன்று நேரடி தமிழ் படங்கள் 1. கிடாரி 2. குற்றமே தண்டனை, 3. இளமை ஊஞ்சல் 4. தகடு ஆகிய நான்கு தமிழ் படங்களும்,இரண்டு ஆங்கிலம், ஒரு தெலுங்கு படம் - ஆக ஏழு திரைப்படங்கள் தமிழக தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ஆங்கில படரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 1. மிரட்டும் இருட்டு 2.இரு கில்லாடிகள் இரண்டு படங்களும் தமிழ் படங்களுக்கு எதிரான தாக்கத்தை வசூலில் உண்டாக்க முடியவில்லை. கிடாரி படத்திற்கு இணையாக "குற்றமே தண்டனை" படம் வசூல் செய்ய இயலவில்லை. மொத்தத்தில் நேற்றைய வசூலில் முதலிடத்தில்கிடாரி இரண்டாவதுSkiptrace மூன்றாவதுDontbreathe நான்கா வது இடத்தை படங்கள் குற்றமே தண்டனைஆகிய படங்கள் இடம்பெற்றன. தகடு, இளமை ஊஞ்சல் படங்கள் எந்த கணக்கிலும் இணைக்க முடியாத படு மந்தமான வசூல்.ஜீனியர் NTR, மோகன்லால் இணைந்து நடித்து நேற்று சென்னை, செங்கல்பட்டு ஏரியாக்களில் 60 திரைகளில் வெளியிடப்பட்ட ஜனதா கேரேஜ் தெலுங்கு, மலையாள மொழி பேசுவோரால் அரங்குகள் நிரம்பிவழிந்தன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.