Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'காஷ்மோரா'வை கைப்பற்றிய திங்க் மியூசின்..!

On September 29, 2016
karthi-kashmora-still-1
Share
karthi-kashmora-still-1 தோழா' படத்திற்கு பிறகு கார்த்தி நடித்துள்ள படம் 'காஷ்மோரா'. இதனை 'ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' புகழ் கோகுல் இயக்கி வருகிறார். இதில் காஷ்மோரா, ராஜ்நாயக் மற்றும் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் ஒரு கேரக்டர் என மூன்று வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நம்மை அசத்தவிருக்கிறாராம். நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகிய இருவரும் கார்த்தியுடன் டூயட் பாடி ஆடியுள்ளனர். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். படத்தை வருகிற தீபாவளி ரேஸில் களமிறக்கவுள்ளது 'ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனம். சமீபத்தில், ட்விட்டப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்நிலையில், படத்தின் ஆடியோ ரைட்ஸை பிரபல நிறுவனமான 'திங்க் மியூசிக்' கைப்பற்றியுள்ளது. படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டை வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.