Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காவிரி மேலாண்மை வாரியம் ! திமுக செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் !

On March 30, 2018
stalin
Share

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு நேற்றோடு முடிவடைந்தது. ஆனாலும், உச்ச நீதிமன்றம் எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எதிர்கட்சியான திமுக எந்த மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது குறித்து திமுக செயற்குழு இன்று காலை கூட்டியது. இந்த கூட்டத்தின் முடிவில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது, நியூட்ரினோ திட்ட அனுமதியை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என்பது உட்பட மொத்தம் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.