Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காவிரி நீர் நிச்சயம் தமிழகத்திற்கு வரும் - பொன்.ராதாகிருஷ்ணன்..!

On May 17, 2018
Tamil-image
Share

எடியூரப்பா தனது பணிகளை துவங்கியுள்ள நிலையில் . முதல் கையெழுத்தாக விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். இந்நிலையில் பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தது மகிழ்ச்சி.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளதால் காவிரி நீர் நிச்சயம் தமிழகத்திற்கு வரும். காவிரிநீர் விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது. சேலையை முள்ளில் போட்டது திமுக. அது சுக்கு நூறாக வேண்டும் என்பதும் அதன் எண்ணம். பாஜக எந்தெந்த மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளதோ, அங்கெல்லாம் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு பிறகு காவிரிநீர் விவகாரம் குறித்து கர்நாடக அரசிடம் பேச உள்ளேன் என கூறியுள்ளார். பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் காவிரிநீர் தமிழகத்திற்கு வருகிறதா என்று.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.