Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காவலர்கள் கண் முன்னிலையில் கணவனை தாக்கும் மல்யுத்த வீராங்கனை!

On March 25, 2025
WhatsApp Image 2025-03-25 at 21.57.26
Share

இந்திய பெண் குத்துச்சண்டை வீரரும், உலக சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கம் வென்றவருமான சாவீட்டி போரா, தன் கணவர் தீபக் நீவாஸ் ஹூடாவை போலீசார் முன்னிலையில் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதாவது ஹரியானாவின் ஹிசார் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தில், சாவீட்டி போரா தனது கணவர் மற்றும் இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டனான ஹூடாவை கைகளால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியான நிலையில் சாவீட்டி தனது கணவரை எதிர்த்து புகார் கொடுத்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சாவீட்டி போரா, கடந்த பிப்ரவரி மாதம் தனது கணவர் வரதட்சனை கேட்டு தன்னை துன்புறுத்துவதாக ஹிசார் போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால் 45 நாட்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதற்கு பதிலாக தன்னை, தந்தை மகேந்தர் சிங் மற்றும் மாமனார் சத்யவானை போலி புகாரில் குற்றவாளிகளாக பதிவு செய்துவிட்டதாக சாவீட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

https://x.com/VoxShadabKhan/status/1904212677091573953?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1904212677091573953%7Ctwgr%5E97d4c0510ba7f81797778e4510973c7341ce7931%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

மேலும், திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன் ₹2.5 கோடி மதிப்புள்ள மெர்சிடீஸ் காரை வற்புறுத்தி கேட்டதாகவும், அவரது தந்தை கடனை வாங்கி ஃபார்ச்சூனர் வாங்கியதாகவும் தெரிவித்தார். கடந்த 2022ம் ஆண்டு ஹூடாவின் தொல்லையால் தான் தற்கொலை முயற்சி செய்ததாகவும் சாவீட்டி கூறியுள்ள நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.