"காலா" பட பாடல்கள் இணையதளத்தில் வெளியீடு !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் காலா திரைப்படத்தின் பாடல்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடைக்சன் நிறுவனம் வெளியிடுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும், படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
