Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"காலா" பட கதாநாயகனின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்...

On June 7, 2017
sairamani
Share
sairamani ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குவதற்காக, அவரிடம் கதை சொல்ல அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்கிறார் இயக்குநர் சாய் ரமணி. இவர் ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படங்களை இயக்கியவர். அதுமட்டுமல்லாது 35 வருடங்களாக ரஜினி ரசிகர் மன்றத்தின் உறுப்பினராக இருக்கிறாராம் இவர்.மேலும் இவர் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸை வைத்து ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தையும் இயக்கியுள்ளார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டிரெய்லரை ரஜினிக்கு காண்பித்தபோது, ‘லாரன்ஸை புதிய கோணத்தில் காட்டியிருக்கிறீர்கள்’ என்று பாராட்டிய ரஜினி, ‘புது கதை ஏதாவது வைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்டாராம். ஆனால், அப்போது எந்தக் கதையும் கையில் இல்லாததால், தற்போது ரஜினிக்காகவே ஒரு பக்கா கதையைத் தயார் பண்ணிவிட்டாராம். ரஜினியிடம் அதைச் சொல்ல அப்பாயின்மெண்ட்டும் கிடைத்துவிட்டதாம். தற்போது நடந்து கொண்டிருக்கும் ‘காலா’ பட ஷூட்டிங் இடைவேளையில் ரஜினியிடம் கதை சொல்லப் போகிறாராம் சாய் ரமணி அவர்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.