Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காற்றுவெளியிடை பட இயக்குனருடன் 6வது முறையாக இணையும் ராவணன் பட ஒளிப்பதிவாளர் !

On July 10, 2017
Sivan-Mani-S
Share
Sivan-Mani-S பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் 6வது முறையாக அவருடன் இணைந்து ஒளிப்பதிவாளர் ஆக சந்தோஸ் சிவன் பணியாற்றவிருக்கிறார். காற்று வெளியிடை திரைபடத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தமிழ் திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. "தளபதி" "ராவணன்" "இருவர்" "ரோஜா" "தில் சே" போன்ற திரைப்படத்தில் மணிரத்தினத்துடன் இணைந்து பணியாற்றியவர் சந்தோஸ் சிவன். தற்போது மீண்டும் அவருடன் இணைந்து ஒளிப்பதிவாளாக இணையவிருக்கிறார். தற்போது, ஏ.ஆர்.முருகதாஸின் 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பில் சந்தோஷ் சிவன் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் பணிகள் செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் தெலுங்கு நாயகன் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 'காற்று வெளியிடை'படத்தின் நாயகி அதிதி இந்த படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் காதல் திரைப்படம் இல்லை என்று,வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் எ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். மணிரத்னம், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.