'காயம்குளம் கொச்சுண்ணி' லுக்கில் நிவின்பாலி !

ஜோதிகா நடித்த '36 வயதினிலே' படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தற்போது நிவின்பாலியை வைத்து மலையாளத்தில் ஒரு படம் இயக்குகிறார். அப்படத்தின் பெயர் 'காயம்குளம் கொச்சுண்ணி' இப்படத்தில் நிவின்பாலியின் தோற்றத்தை அவுட்லைனாக வெளியிட்டுள்ளார்.
மேலே உள்ள புகைப்படத்தில் பார்ப்பதற்கு, சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரன் போன்ற கெட்டப்பில் காட்சியளிக்கும் நிவின்பாலி, உண்மையிலேயே இந்தப்படத்தில் மிகப்பெரிய கொள்ளைக்காரனாக நடித்துள்ளார் என்பது தான் ஹைலைட்டான விஷயம். 1980களில் கேரளாவில் நிஜமாகவே வாழ்ந்த மிக பயங்கர கொள்ளையன் தான் இந்த 'காயம்குளம் கொச்சுண்ணி', கேரளா பார்டரை விட்டு தாண்டி வந்து தமிழக எல்லைப்பகுதியில் திருடுவதில் பெயர் போனவர் இவர். அதிலும் களரி சண்டையில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பார்கள். இவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் இந்தப்படத்தில் படமாக்கவுள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். அதனால் இந்த கேரக்டரில் நடிக்கும் நிவின்பாலியும் இந்தப்படத்திற்காக களரி சண்டை பயிற்சியெல்லாம் கற்றுக்கொண்டுள்ளாராம்..
படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
