Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி மாற்றப்படும் - ராகுல்காந்தி அதிரடி..!

On September 28, 2018
21335
Share

வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் வரும் வாய்ப்பு இருப்பதால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்.

நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, 'காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜிஎஸ்டி வரிவிகித முறை மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தார். ராகுல்காந்தியின் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் வேலியே பயிரை மேய்ந்தது போல் பிரதமர் மோடியின் செயல்பாடு இருப்பதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் முன் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காம்தா நாத், ராமர் கோவில்களுக்கு சென்று ராகுல்காந்தி வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் வரும் வாய்ப்பு இருப்பதால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்.

நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, 'காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜிஎஸ்டி வரிவிகித முறை மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தார். ராகுல்காந்தியின் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் வேலியே பயிரை மேய்ந்தது போல் பிரதமர் மோடியின் செயல்பாடு இருப்பதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் முன் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காம்தா நாத், ராமர் கோவில்களுக்கு சென்று ராகுல்காந்தி வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.