Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கழுத்தை நெறித்து கணவனை கொண்று கபட நாடகமாடிய மனைவி - தட்டி தூக்கிய போலீசார்.

On July 11, 2024
WhatsApp Image 2024-07-11 at 08.38.49
Share
ஆவடி அடுத்த பட்டாபிராம் முத்தா புதுப்பேட்டை ராணுவ குடியிருப்பில் வேளாங்கண்ணி தாஸ் வசித்து வந்தார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தினமும் நிறைய குடித்துவிட்டு வீட்டில் சண்டை போடுவது வழக்கமாக வைத்திருந்தார். கடந்த மே- 10ம் தேதி இரவு குடிபோதையில் வீட்டில் மனைவியுடன் தகராறு செய்த போது, ​​வாக்குவாதம் முற்றி மனைவி நீமா ரோஸ் மேரி தனது கணவரை சேலையால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, அதிகளவில் மதுவை உட்கொண்டதால், தலைக்கேறிய போதையில் அவர் சுயநினைவை இழந்தார் என்று ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். வேளாங்கண்ணி தாஸை ராணுவ மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிய நிலையில், தகவலறிந்த முத்தா புதுப்பேட்டை போலீசார் விரைந்து சென்று, இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது, போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, ராணுவ வீரரின் மனைவி லீமா ரோஸ் மேரியை கைது செய்து விசாரித்தனர். கணவர் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்வதால், கணவர் தொல்லை தாங்க முடியாமல் சேலையால் கழுத்தை நெரித்து கொன்றதாக நீமா ரோஸ் மேரி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் மீது முத்தா புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இராணுவ வீரர் ஒருவரின் மனைவி, புடவையால் கணவரை கழுத்தை நெரித்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.