கள்ளக்காதலுடன் சேர்ந்து மூன்று வயது குழந்தைக்கு சூடு போட்ட தாய் : போலீசார் கைது!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வந்தனா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிய மூன்று வயதில் பிரசன்னா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் வந்தனா தன் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு ஸ்ரீராம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அடிக்கடி தன் கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்தார். இந்நிலையில் தன்னுடைய கள்ள காதலுக்கு குழந்தை பிரசன்னா இடையூறாக இருப்பதாக வந்தனா நினைத்துள்ளார்.
இதனால் அடிக்கடி தன்னுடைய குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்துள்ளார். குறிப்பாக தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளுக்கு உடம்பு முழுவதும் அவர் சூடு வைத்துள்ளார். இதனால் குழந்தை வலி தாங்காமல் இரவு முழுவதும் கதறி அழுது கொண்டே இருந்தது. குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அப்போதுதான் அந்த பகுதி மக்கள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வந்தனா செய்த கொடூரம் பற்றி போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் வந்தனா மற்றும் ஸ்ரீராம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
