கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் இன்று.

இன்று கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாள்:
தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி (இன்று) தி.மு.க.
சார்பில் கொண்டாடப்படுகிறது. அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் காலை 9 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் 9.15 மணி சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலைக்கும், 9.30 மணிக்கு சென்னை கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும் மற்றும் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 9.15 மணி சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலைக்கும், 9.30 மணிக்கு சென்னை கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும் மற்றும் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஅமலுக்கு வந்தது சுங்கச்சாவடி கட்டண உயர்வு
