கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவே ஆட்சியை பிடிக்கும்! கருத்துகணிப்பில் தகவல்!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் 'காப்ஸ்' எனும் தனியார் நிறுவனம் ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியது.
அந்த கருத்து கணிப்பில்:- தற்போது தேர்தல் நடந்தால், பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். பா.ஜ., -- 113, காங்., - 85, மதச்சார்பற்ற ஜனதா தளம் - 25 இடங்களில் வெற்றி பெறும். மேலும், பழைய மைசூரு மண்டலத்தின், 37 தொகுதிகளில் 21 இடங்களும், பெங்களூரு மண்டலத்தின் 32 தொகுதிகளில், 16 இடங்களும், காங்கிரசுக்கு கிடைக்கும். கடலோரம் மற்றும் வட கர்நாடக மாவட்டங்களில், பெரும்பாலான தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றும். மத்திய மண்டலத்தில் பா.ஜ., - காங்., கட்சிகள் சரி சமமான தொகுதிகளை கைப்பற்றும் என்று அந்த கருத்து கணிப்பில் கூறப்படுகிறது.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
