கருணாநிதி உடல் நலம் விசாரிக்க சென்னை வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வர இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆறு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலத்தை கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் நேரிலும், தொலைபேசியிலும் கேட்டறிந்து அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தினர்.
இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று கேட்டறிந்தர். ஏற்கனவே இலங்கை அதிபர் சிறிசேனா அவர்கள் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும் என கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், இந்திய பிரதமர் ராம்நாத் கோவிந்த் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 5ம் தேதி) சென்னை வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
