கம்யூனிஸ்ட் அரசின் கடைசி முதல்வர் பினராயி விஜயன் - எச்.ராஜா ஆவேச பேச்சு..!

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் கேரளாவிலும் பாஜக காலூன்ற முடியாமல் திணறி வருகிறது. பாஜக என்னதான் முயன்றாலும் இந்த இரு மாநிலங்களிலும் அந்த கட்சியால் நோட்டாவை கூட பின்னுக்கு தள்ள முடியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் நிகழ்ந்த சபரிமலை பிரச்சனையை பாஜக கையில் எடுத்து கொண்டு அம்மாநிலத்தில் காலூன்ற பாரதிய ஜனதா கட்சி முயல்கிறது. பினராயி விஜயன் ஆட்சியை கலைப்பேன் என்று அமித்ஷா பகிரங்கமாக பயமுறுத்தும் அளவுக்கு நிலைமை சீரியஸாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கேரளாவில் நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து கூறியபோது, 'கம்யூனிஸ்ட் அரசின் கடைசி முதல்வர் பினராயி விஜயன், அந்த ஆட்சியை அரபிக் கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
