Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கமல் சொல்றதையும் கொஞ்சம் காதுல வாங்குங்க எழுத்தாளர்களே...!

On July 22, 2014
kamal
Share

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு இலக்கிய கருத்தரங்கில் பேசிய கமல், “புதிய எழுத்தாளர்களின் கவனம் கொஞ்சம் சீனியர் நடிகர்களுக்கான கதை எழுதுவதிலும் திரும்பவேண்டும்..” என்று கூறியதோடு அதற்கு ஹாலிவுட்டையும் உதாரணம் காட்டியுள்ளார்.

மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் இளம் ஹீரோக்களுக்காக எழுதப்படும் கதைகளில் சீனியர் ஹீரோக்கள் நடிக்கவேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளனர் என்றும் கூறியுள்ளார் கமல். பத்து வருடத்திற்கு முன் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘சிம்மாத்ரி’ படத்தை ரீமேக் செய்து இங்கே நடித்தவர் விஜயகாந்த்... அங்கே ஹிட்டான படம் இங்கே பிளாப்..

இது ஒரு சாம்பிள் தான்.. மேலும் பாலிவுட்டில் அமிதாப் இன்றும்கூட ஒரு நடிகனால் நீண்ட காலம் தொடர்ந்து நடிக்க முடியும் என்று தன்னம்பிக்கையுடன் நிரூபித்து வருவதற்கு காரணம் அவருக்கேற்றாற்போல் அமையும் கதைகள் தான் என்றும் கூறியுள்ளார் கமல். ஆகவே கமல் சொன்னதை கொஞ்சம் காதுல வாங்குங்க எழுத்தாளர்களே...!

Tags:
#kamal

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.