கமல் எப்படி அரசியலுக்கு வருகிறார் என்பதை பார்போம்- தமிழிசை!

சென்னை கமலாலயத்தில் இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தபோது, தமிழிசை கூறியதாவது:
அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செய்யும். யார் மக்களுக்காக களத்தில் இறங்கினாலும் மகிழ்ச்சிதான். இன்றைய சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்பவர்களாக அவர்கள் இருக்கிறார்களா?
எண்ணூருக்கு போகட்டும், மக்களுக்காக ஏதாவது செய்யட்டும். களத்தில் இறங்கட்டும். சுற்றுப் பயணம் செய்யட்டும், மீனவ சமுதாயத்திற்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சியே. தங்களது பங்களிப்பையும் அளிக்கட்டும்.
பார்க்கலாம், எப்படி அரசியலுக்கு வருகிறார்கள் என்பதை பார்க்கலாம். ஏற்கனவே தொடர்ந்து அரசியல் தலைவர்களும் மக்கள் நலனுக்காகத்தான் உழைத்துக் கொண்டுள்ளார்கள்.
ஏதோ இவர்கள் மட்டும்தான் வந்து அரசியல் செய்துவிட முடியும் என்பது இல்லை. மக்கள் யாரை ஏற்றுக்கொண்டாலும் சந்தோஷம்தான். மக்கள் புத்திசாலிகள்தான், யாரை ஏற்றுக்கொள்ள வேண்டுமோ அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
