Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கமல்ஹாசன் தொடங்கிய கட்சி நான்கு அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

On September 27, 2018
5490
Share
தேசிய கட்சிகள் மற்றும் நடிகர்கள் தொடங்கும் கட்சிகள் நான்கு அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் அதிமுக சார்பில் நேற்று சிவகாசியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். 'தமிழநாட்டில் பாஜக, காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளுக்கு வேலையில்லை. கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் தொடங்கும் கட்சிகள் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்காது. அதிகப்பட்சமாக நான்கு அமாவாசைக்குள் காணாமல் போய்விடும்' எனக் கருத்துத் தெரிவித்தார். மேலும் திமுக அதிமுக குறித்து கூறுகையில் 'தமிழநாட்டில் அதிமுக மற்றும் திமுக மட்டுமே நிலைக்கும். நாம் ஆளும் கட்சியாக இருப்போம் அவர்கள் எதிர்க்கட்சியாக இருப்பார்கள்' என அதிரடியாக பேசியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.