Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கமலைக்கலாய்த்த ரஜினி !அடக்கிவாசித்த கமல்!

On October 1, 2017
22185033_1482627591774129_636316645_n
Share
22156694_1482627585107463_484314226_n சிவாஜி மணிமண்டப விழாவில், ரஜினி பேசியதாவது , "ஓபிஎஸ் ஒரு அதிர்ஷ்டசாலி , ஏனெனில் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை திறக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது சிவாஜி நடிப்பில் சக்கரவர்த்தி, தமிழ் மக்கள் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து ஹீரோக்களையும் ரசிக்க வைத்தார். சுதந்திர வீரர்களின் கதைகள், ஆன்மீக படங்கள் என தமிழ் மக்களை கவர்ந்ததால் தான், அவருக்கு மணிமண்டபம் கட்டும் பாக்கியம் கிடைத்துள்ளது. ஆன்மீக மறுப்பு உச்சத்தில் இருந்த போது, நெற்றியில் பொட்டு வைத்து திரையுலகில் உச்சம் தொட்டவர் சிவாஜி. சிலை என்பது மக்களால், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேண்டும். அப்போது தான் அதற்கு மதிப்பு. இது அரசியல், சினிமா சேர்ந்த விழாவாகும். அரசியல்ல நின்று, அவரது தொகுதியிலே சிவாஜி தோற்றார். இது அவருக்கு அவமானம் இல்லை, அவரது தொகுதி மக்களுக்கே அவமானம் என்றார். வெற்றி, புகழைத்தாண்டி அரசியலில் ஜெயிக்க வேறு ஒன்றும் வேண்டும். அது மக்களுக்குத்தான் தெரியும். எனக்கு தெரியவில்லை. ஒருவேளை கமலுக்குத் தெரிந்திருக்கலாம் . தெரிந்தாலும் சொல்லமாட்டார். ஒருவேளை இரண்டு மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் சொல்லிருப்பார் ,இப்போது கேட்டால் என்னோடு வா சொல்கிறேன் என்பார்" என ரஜினி கமலை போட்டுத்தாக்க, . அடுத்ததாக வந்த கமல் , "இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விழா, நான் யார் தடுத்திருந்தாலும் இந்த விழாவிற்கு வந்திருப்பேன் , நடிகனாக இல்லாவிட்டாலும் ஒரு ரசிகனாக வந்திருப்பேன்" என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.