Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கபடதாரிக்கு பிறந்த நாள் பரிசு கொடுத்து அசத்திய படக்குழு

On October 6, 2020
Kabadathari
Share

கொரோனா பாதிப்பால் பெரிதும் பாதிப்படைந்த சினிமாத்துறை தற்போது மெல்ல தலை தூக்க தொடங்கியுள்ளது. திரைப்பட படப்பிடிப்புகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, பாதியில் நின்று போன படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளது. அந்த வகையில், "கபடதாரி" படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

அந்த வகையில் கோலிவுட்டின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான சிபிராஜ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இன்று அவர் தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வரும் நிலையில், அவர் நடிப்பில் உருவாகி வரும் "கபடதாரி" படக்குழுவினர் சர்பிரைஸ்
பிறந்தநாள் பரிசு ஒன்றை வழங்கி அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் சிபிராஜுக்கு சர்பிரைஸ் பரிசு வழங்க நினைத்த "கபடதாரி" படக்குழுவினர் படத்தின் பஸ்ட் லுக்கை இன்று வெளியிடுவதாக அறிவித்ததோடு, சிபிராஜிக்கு பிடித்த ஹீரோக்களில் ஒருவரான சூர்யாவே, பஸ்ட் லுக்கை வெளியிடும்படியும் செய்துள்ளார்கள்.

இது பற்றி சிபிராஜுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், நேற்று இரவு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டதும், சிபிராஜ் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

'கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்' நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். சிமோன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். திரையரங்குகள் முழுமையாக திறந்த உடன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.