கன்னடத்தில் ரீமேக்காக்கும் விஜய் சேதுபதி, நயன்தாரா படம் !

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் "நானும் ரவுடிதான்" . இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியும் கண்டது . மேலும் பார்த்திபன், ராதிகா, ஆர்ஜே.பாலாஜி நடித்திருந்தனர்.
தனுஷ் தயாரித்திருந்தார். தற்போது இந்தப் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்கிறார் தனுஷ். நயன்தாரா நடித்த கேரக்டரில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். விஜய் சேதுபதி கேரக்டரில் ரிஷி நடிக்கிறார். ஸ்லுத்தீன் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
இந்த மாத இறுதியில் படப்பிடிப்புகள் துவங்குகிறது. தமிழ் படத்தை தொடர்ந்து மலையாள படங்களும் தயாரித்து வரும் தனுஷ், இப்போது கன்னடப் பட உலகிலும் தயாரிப்பாளராக கால் பதிக்கிறார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
