Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கனமழை எதிரொலி... காஞ்சி, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

On November 3, 2017
xrain-mumbai-600-03-1509715565.jpg.pagespeed.ic.q7LbfqSZmw
Share
 , xrain-mumbai-600-03-1509715565.jpg.pagespeed.ic.q7LbfqSZmw தமிழகம் முழுக்க இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இக்கனமழை காரணமாக காஞ்சி, திருவாரூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் மற்றும் கடலோர மாவட்டங்களில் மூன்று நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. ஏரிகள் நிரம்பி இருப்பதால் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் இன்னும் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.  , இந்த மழையின் காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதையடுத்து காஞ்சி, திருவாரூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தார் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா. அதேபோல் திருவாரூரிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.