Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"கத சொல்லப் போறோம்" திரைப்பட விமர்சனம்:

On May 20, 2016
Katha Solla Porom Review
Share
Katha Solla Porom Review நடிகர்கள்: ஷிபானா, ரவீனா, அரவிந்த் ரகுநாத், அரவிந்த், ஷாமு, அர்ஜுன், ஜெனி, ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, அக்ஷரா, கலி வெங்கட், பசங்க சிவகுமார் மற்றும் ராகுல் சாமுவேல். தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு: ஜெமின் ஜோம் அயாநாத், இசை: பவன், படத்தொகுப்பு: விஜய், பாடல்கள்: கல்யாண், வினோதன், தயாரிப்பு: ரிலாக்ஸ் ஆட்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக எஸ்.கல்யாண், கதை, திரைகதை, வசனம் மற்றும் இயக்கம்: எஸ்.கல்யாண். " கத சொல்லப் போறோம்" - அருமையான கதையை படமாக சொன்ன இயக்குனருக்கு முதல் பாராட்டு. "அன்புள்ள ரஜினிகாந்த்" படத்தை சில காட்சிகள் நினைவுக்கு வரவழைத்தாலும் திரைக்கதையில் புதுசா களம் கண்டுள்ளார் டைரக்டர். பல வருடஙரகளாக குழந்தையில்லாத தம்பதி நரேன் விஜயலட்சுமிக்கு தேவதை போல பெண் குழந்தை பிறக்கிறது. சந்தோஷத்தில் கவனக்குறைவாக யார் குழந்தையை கேட்கிறார் என்று கூட யோசிக்காமல் குழந்தையை..பச்ச குழத்தையை, குழந்தையை கடத்தும் பெண்ணிடம் பறி தந்துவிட்டு அப்பா நரேன் படுற வேதனை கண்களை ஈரமாக்கும். இப்ப அந்த குழந்தை மீண்டும் பெற்றோர்களிடம் வந்து சேர்கிறதா? என்ற சுபமான கதையை ஆதரவற்ற இல்ல குழந்தைகளோடு கலகலப்பாக, கூறும் படமே "கத சொல்லப் போறோம்". சுட்டி குழந்தைகள் நல்ல தேர்வு. குறிப்பாக அர்ஜூன் கேரக்டரில் வரும் ஷாமு ஸ்கோரில் 100/100 அடிக்கிறான். காளி வெங்கட் வாட்ச்மேனாக குழந்தைகளோடு விளொயாடி குழந்தையாகவே மாறியுள்ளார். ஆதரவற்ற இல்லத்தில் மேற்பார்வை மற்றும் பி.டி.மாஸ்டராக வரும் அரவிந்த் யதார்த்தமான நடிப்பு. ப்ரியா டீச்சருடன் தனக்கு உள்ள உறவை கூறாமல் அமைதியாக இருப்பது, கிளைமாக்ஸ. காட்சியில் தன்னை வேண்டாம் என்று கூறிவிட்டுச்சென்ற மணைவியே அவள் என ஆடியன்ஸ் அறிய செய்வது டைரக்டரின் திறமை. தவறை மறந்து விவாகரத்து பெற்றவள் மீண்டும் இணைவது சூப்பர்(இப்படி நிஜமாக நடந்தால் நாட்டுக்கு நன்மையே). ஒரு தகராறு அங்கே ஒருவன் கைதாக, அவனிடமிருந்த ஒரு போட்டோ காணாமல் போன குழந்தை பெற்றோருடன் சேர உதவிடுவது ஆஹா நல்ல திரைக்கதை, இந்த படத்தில் நல்ல போலிஸாக சேரன்ராஜ் கலக்கிவிட்டார். இரண்டு கண்களை இழந்த சிறுமி பேசும் ஒவ்வொரு வசனமும் நெஞ்சத்தை சு( தொ( டுகின்றன. மதராக நடித்தவர் முகத்தில் அற்புதமாக எக்ஸ்பிரஷன்களை காட்டி அழவைக்கிறார். சுற்றுலாவில் கண்பார்வையற்ற சிறுமி, சக தோழியின் ஆசையை பெரிய மனசுடன் நிறைவேற்றி தியாகியாகும் இன்னொரு சிறுமி பிரமாதம். இசை இனிமை, ஒளிப்பதிவு அருமை, பின்னணி இசை சரியாக அமைந்து தாலாட்டுகின்றது. ஆக குழந்தைகளை வைத்து ஒரு தரமான படத்தை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குனர் கல்யாண் குழுவுக்கு பாராட்டுக்கள். விமர்சனம்: பூரி ஜெகன்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.