Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கதாநாயகனை அண்ணா என்று அழைத்த கதாநாயகி....

On February 18, 2017
Panjumittai Audio & Trailer Launch
Share
Panjumittai Audio &, Trailer Launch மாகாபா ஆனந்த், கிடாரி நிகிதா விமல் நடித்திருக்கும் புதிய படம் "பஞ்டுமிட்டாய்". இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குநராக இருந்த S.P.மோகன் இயக்கியிருக்கிறார். நேற்று இந்தப்படத்தின் இசை வெளியீடு பத்திரிக்க்கையாளர்கள் முன்னிலயில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் ரஞ்சித், ராஜீமுருகன் இசையமைப்பாளர் டி.இமான் உட்பட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய ஹீரோயின் நிகிதா விமல் இந்தப்படத்தில் நிறைய CG காட்சிகள் இருந்தது. அந்த காட்சிகளில் எப்படி நடிப்பது என்பது எனக்கு சுத்தமாக தெரியவில்லை. இயக்குநர் CG எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை கூட்டிப்போய் காட்டினார். நான் எந்தெந்த காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாது என்றி பேசினார். இந்த விழாவில் பேசிய மாகாபா ஹிரோயின் நிகிதா விமல் முதல் முதலில் அறிமுகமானபோது அண்ணா என்று கூப்பிட்டார். நம்ம ரெண்டு பேரும் ஜோடியா நடிக்கனும் என்ன அண்ணானு கூப்பிடாதீங்கனு சொன்னேன். ஆனா என்னை இப்பவரைக்கும் அண்ணானுதான் கூப்பிடுறாங்க. எனக்கு இப்படி ஒரு அழகான தங்கச்சி என சுவை பட பேசினார். வந்திருந்த பிரபலங்கள் படத்தை வாழ்த்தினர். மாய எதார்த்த ஜானரில் தயாராகும் முதல் படமாக இது இருக்கும் என அனைவரும் வாழ்த்தினர். ஒரு கணவன் மனைவி இடையே நடக்கும் களேபரங்களை மாய எதார்த்த உலகத்தை காமெடியாய் காட்டும் என்று சொன்னார் இயக்குனர் மோகன்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.