Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கண் துடைப்பிற்காக 1 ரூ குறைத்த தமிழக அரசு...

On January 29, 2018
201712201034117045_1_busconductor._L_styvpf
Share
201712201034117045_1_busconductor._L_styvpf தமிழக அரசு கடந்த 19-ந் தேதி அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.இந்த கட்டண உயர்வுக்கு எதிராக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல், கல்லூரி புறக்கணிப்பு என போராட்டங்களில் இறங்கினர். மேலும், தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.இன்று (திங்கள்) பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட உள்ளதாக அவர்கள் அறிவித்தனர். இந்நிலையில்....கண் துடைப்பிர்க்காக 1 ரூ குறைத்துள்ளது. தற்போது சாதாரண பேருந்துகளில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்படுகிறது. விரைவுப் பேருந்துகளில் கட்டணம் 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன சொகுசு பேருந்துகளில் (அல்ட்ரா டீலக்ஸ்) 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும், குளிர்சாதன பேருந்துகளில் 140 பைசாவிலிருந்து 130 பைசாவாகவும் குறைக்கப்படுகின்றது. சென்னை மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5லிருந்து ரூ.4ஆக குறைக்கப்படுகிறது. மேலும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 குறைக்கப்படுகிறது. அதேபோன்று மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நகர்ப்புற பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.4ஆக குறைக்கப்படுகிறது. மேலும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 குறைக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் கட்டண உயர்வுக்கு பின்னர் அரசுப்பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால், தினமும் 10 கோடி அளவில் வருமான இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டம் தொடருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.