Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் 'முகமது ஷமி'!..

On March 22, 2017
Shami-4
Share
Shami-4 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பங்கேற்பார் என கூறப்படுகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் ’டிரா’வில் முடிந்தது. இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 25ல் தரம்சாலாவில் துவங்குகிறது. இதில் இந்திய வீரர் முகமது ஷமி பங்கேற்பார் என தெரிகிறது. இதற்காக ஷமி, தரம்சாலா சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கேப்டன் கோலி கூறுகையில்,’ ஷமியை பயிற்சிக்காக தரம்சாலா அனுப்பியுள்ளோம். போட்டியின் அவர் விளையாடுவது குறித்து தேர்வுக்குழுவினர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளது.’என்று கூறினார்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.