Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'கடாரம் கொண்டான்' - கமல் வெளியிட்ட விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

On November 7, 2018
828a9e9d-4c13-40f0-8faf-9255cf1655bb
Share
விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். சாமி ஸ்கொயர் படத்தையடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படம் கடாரம் கொண்டான்'. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷராஹாசன் நடிககிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்குகிறார். தீபாவளி திருநாளையொட்டி இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக்கை நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். வெள்ளை தாடியில் வாயில் புகையில், கண்ணில் கண்ணாடியுடன் படுமிரட்டலாக இருக்கிறார் விக்ரம். வலது தோள் பட்டையில் டாட்டூவுடன், உள்ளங்கையை வெறித்து பார்க்கும் விக்ரம், உண்மையிலேயே வித்தியாசமாக தெரிகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குதா ஒளிப்பதிவு செய்கிறார். கடாரம் கொண்டான் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.