கடலில் தவறி விழுந்த துறைமுக ஊழியர் மாயம்!

சென்னை துறைமுக ஊழியர், கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமாகினார்.
திருவல்லிக்கேணி அருகேயுள்ள குப்பத்தைச் சேர்ந்த தமிழ் செல்வன் என்பவர் பணி நிமித்தமாக கப்பலுக்கு வந்துள்ளார். அப்போது, எதிர்ப்பாராதவிதமாக கடலில் விழுந்துள்ளார். இதை பார்த்த மற்றவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். செல்வன் விழுந்த பகுதியில் 100 அடி ஆழம் உள்ளதால் அவரை தேடும் பணி கடினமாக இருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக துறைமுக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துறைமுக பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் செய்து தரப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டை துறைமுக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
