கஜா புயல் பாதிப்பு : நாளை ஆய்வு செய்கிறார் பாதுகாப்பு துறை அமைச்சர்..!

கஜா புயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்கிறார்.
கஜா புயலால் 7 மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. மக்கள் தங்கள் உடைமைகளை இழந்ததுடன் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு ரூ. 15000 கோடி நிதி கோரியுள்ளது.
இதைத் தொடர்ந்து கஜா புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் 3 நாட்கள் ஆய்வு செய்து விட்டு நேற்று டெல்லி திரும்பினர். இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகப்பட்டினத்தில் ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்நிலையில் புயல் பாதித்த பகுதிகளில் நாளை பிற்பகல் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்யவுள்ளார். இவர் ஒக்கி புயலின்போதும் ஆய்வு பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
