கஜா புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு துணை நிற்போம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு..!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ள கஜா புயல், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடும் சேதத்தை விளைவித்து உள்ளது. நாகப்பட்டினம், திரு வாரூர், தஞ்சாவூர் புதுக்கொட்டைஎன்றுபல பகுதிகளில் மக்கள் தங்களின் வீடு மற்றும் விவசாய நிலத்தை இழந்து, அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கஜா புயல் காரணமாக சுமார் 1,17,624 வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும், 1 லட்சத்துக்கும் அதிகமான மாரங்கள் வேரோடு சாயந்து உள்ளது, ஆயிரக்கணக் கான மின் கம்பங்கள், சுமார் 88,102 ஹெக்டேர் பயிர்களை நாசம் செய்துள்ளது.மேலும் 46 உயிர்களையும் பலி வாங்கி உள்ளது.
தற்போது புயல் பாதித்த பகுதிகளிலும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிகத்திற்கு கேரள மாநில அரசு துணை நிற்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட திருவாரூல், நாகப்பட்டினம் மக்களக்கு குடிதண்ணீர், கூடாரம் அமைக்க தேவையான தார்பாலின், மெழுகு வர்த்தி, உணவு பொருட்கள், துணிகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
