கஜா புயலால் பாதித்தவர்களுக்கு கமல்ஹாசன் ரூ.1.20 கோடி நிவாரண உதவி..!

கஜா புயலில் சிக்கிய மொத்த மாவட்டங்களில் ரூ. 1.20 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் செய்யப்பட்டு உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் தமிழ்நாட்டையே புரட்டிபோட்டு டெல்டா மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது. இதில் இருந்து மக்கள் எப்படி மீள போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தானும் தங்கள் கட்சியும் உயிராகவும் உணர்வாகவும் உடனிருப்பதாகவும், விரைவில் அவர்களை சந்திப்பேன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
அதன்படி நேற்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய கமல், "ஒரு விவசாயி தன்னுடைய தென்னை தோப்பு நாசமானதால் மனமுடைந்து விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்".
இதனை கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகினேன் என்றார். மேலும் மக்கள் நீதி மய்யம் தோழர்கள் சார்பாக 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணம் வழங்கியுள்ளார்.
மேலும் கஜா புயலில் சிக்கிய மொத்த மாவட்டங்களில் ரூ. 1.20 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் செய்யப்பட்டு உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
