Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்..!

On November 28, 2018
la
Share
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு நிவாரண உதவிகளை பல நடிகர்கள் வழங்கி வருகிறார்கள். நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து நேரிடையாக உதவிகளைச் செய்து வருகிறார். ஒரு பாட்டி, புயலால் பாதிக்கப்பட்ட அவருடைய வீட்டைப் பற்றி கண்ணீருடன் சொன்ன வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது. அதைத் தொடர்ந்து புயலால் வீடிழந்த 50 பேருக்கு தலா 1 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டித் தருவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். சமூக வலைத்தளத்தின் மூலம் வெளிவந்த, அந்த பாட்டி யார் என்பதைக் கண்டுபிடித்து அவருக்கு வீடு கட்டித் தரும் வேலையை ராகவா லாரன்ஸ் ஆரம்பித்துள்ளார். இன்று அதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.