ஓ.பி.எஸ் & இ.பி.எஸ், புதிய தொலைக்காட்சியை உருவாக்க திட்டம்!

எடப்பாடி பழனிசாமியும்,பன்னீர் செல்வமும் இணைந்து ‘நமது அம்மா’ என்ற பெயரில் டிவியும் பத்திரிகையும் துவங்க முடிவு செய்து முழு வீச்சில் பணியை துவங்கியுள்ளனர்.
பிளவு பட்டிருந்த அ.தி.மு.க அணிகளில் தற்போது ஒன்றாக இணைந்ததை அடுத்து,பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஜெயா டிவியை கைப்பற்றுவோம், நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையை கைப்பற்றுவோம் என்று முழங்கிவந்தனர்.அதன்பின்னர்தான் அந்த இரு நிறுவனங்களுமே சசிகலாவின் தனிச் சொத்துக்கள் என்பதே அவர்களுக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்த போது அவர்களும் இந்த இரண்டையும் மீட்க முடியாது,ஆனால் சட்ட ரீதியான சிக்கல்களை வேண்டுமானால் ஏற்படுத்தலாம் என்று சொல்ல ஆழ்ந்து யோசித்த பன்னீரும், எடப்பாடியும் நமது கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்ல டிவியும் , பத்திரிகையும் வேண்டும் என்று சொல்லி ‘நமது அம்மா’என்ற பெயரை பதிவு செய்திருக்கிறார்கள்.
நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கையிலிருந்து சில காலம் தினகரனால் நீக்கப்பட்ட அழகு முத்துமுத்துராஜை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார்கள்.ஆனால் அவர் சில விஷயங்களை யோசித்து மறுத்திருக்கிறார். அழகு முத்துராஜ் மீது சில வழக்குகளும் உள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக நினைவூட்டி அவரை சரிக்கட்டியிருப்பதாக கூறப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
