Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஓ.எம்.ஆர், சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி !

On March 24, 2018
chennaiomrroad-1521884115-600x400
Share

பெருங்குடி சுங்கச்சாவடி அருகே இன்று 8 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. எப்போதுமே போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் மேலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக காணப்பட்டது.

சென்னை நகரில் அண்ணா சாலையில், மயிலாப்பூரில் ஆங்காங்கே பள்ளம் ஏற்படுகிறது. பஸ், கார் கவிழும் அளவிற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை பழைய மகாபலிபுரம் சாலையில் 4 அடி அளவிற்கு பள்ளம் ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கவே, தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசார் உடனடியாக போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அத்துடன், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், மெட்ரோ குடிநீர் குழாய் உடைந்ததில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் டிராக்டர் மூலம் மணல் கொண்டு வரப்பட்டு பள்ளம் மூடப்பட்டது. திடீர் பள்ளம் காரணமாக சாலையில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.