Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஓவியா விவகாரம் சிம்புவுக்கு சம்பந்தம் இல்லை!!

On August 7, 2017
oviya
Share
oviya சிம்பு அவரது டிவிட்டர் பக்கத்தில் ஓவியாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவது போல் குறிப்பிட்டிருந்ததாக கடந்த சில நாட்களாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இதற்கு சிம்பு தரப்பிலிருந்து, ‘‘ஒரு செய்தி வந்தால், அதனை செக் செய்து கொள்ளாமல் வெளியிடுகிறார்கள். சிம்புவின் ட்விட்டர் கணக்கில் அப்படியொடு டிவிட் வரவே இல்லை. ‘ஒருவர் மற்றவர்களைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி, குற்றம் சாட்டுவதை விடுத்து, அவர்களை தனியாக விடுவது நல்லது. நான் யாரையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. ஓவியா எப்படி இருக்கிறாரோ அது எனக்கு பிடித்திருக்கிறது. அவ்வளவுதான்!’ இது தான் சிம்பு தரப்பில் டிவிட் செய்யப்பட்டது. சிம்பு, தனது அடுத்த படத்துக்கான கதை விவாதம் மற்றும் ‘சக்கப் போடு போடு ராஜா’ பாடல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் அவரது அடுத்த படம் பற்றி முறையான அறிவிப்பை வெளியிடுவார். அவரைப் பற்றிய தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்’ என விளக்கம் தருகிறார்கள்! ‘சிம்பு அப்படியொரு விருப்பத்தை டிவிட் செய்துவிட்டு பின்னர் அழித்துவிட்டார்’ என ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.