ஓடும் பேருந்தில் கொள்ளை முயற்சி: கொள்ளையர்களை சுற்றி வளைத்த பயணிகள்...

சென்னையிலிருந்து கோவை நோக்கி செல்லவிருந்த தனியார் பேருந்து இன்று காலை அரும்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது பயனிகளைபோல் ஏறிய 5 பேர் திடிரென பயணிகளிடமிருந்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
இவ்வாறு கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையர்களை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சுற்றி வளைத்து உள்ளனர். சுற்றி வளைத்து பிடிபட்ட 5 பேரில், 4 பேர் தப்பியோடினர். பிடிபட்ட ஒருவரை பயணிகள் போலீஸில் ஒப்படைத்தனர்.
போலிஸில் ஒப்படைக்கப்பட்டு விசாரித்ததில் அந்த நபர் திருவள்ளூரை சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் தினேஷ் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கு முன் அவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளதும் தெரிய வந்துள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postகண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்...
Next Postமீண்டும் இணையும் பாகுபலி கூட்டணி...
