Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..

On June 17, 2020
corona4e53-1591966619
Share

கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,54,065 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,974 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2003 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம்   அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 11,903 பேர் உயிரிழந்த நிலையில் 1,86,935 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,13,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5537 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 57,851 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது   இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 48,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை  528 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 26,782 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 44,688 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 1837 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 16,500 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.