Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஒரு அறிமுக இயக்குநர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்

On February 19, 2021
Rajavamsam
Share

'செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்' சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள படம் "ராஜ வம்சம்".
இப்படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் /நடிகர் சசிகுமார் நடிக்க, இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் .

தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குநர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை. நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் C . அவரிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு .

இந்த படத்தில் ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி மணி சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர் , ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை,மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என 49 கலைஞர்கள் நடித்துள்ளனர் .

அதிக நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருப்பதால், ரசிகர்களின் கண்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக அமையும்.

சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசை அமைத்துள்ளார். கலை இயக்கம் சுரேஷ் மற்றும் படத்தொகுப்பினை சபு ஜோசப் மேற்கொண்டுள்ளார்.

செந்தூர் பிலிம்ஸ் சார்பில் TD ராஜா தயாரித்துள்ள "ராஜ வம்சம்" மார்ச் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது .

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.