Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஐ.பி.எல்-ன் மிகப் பிரமாண்டமான ஏலம் இன்று தொடங்குகிறது.

On January 27, 2018
ipl
Share
ipl பத்து ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்-ன் மெகா ஏலம் இன்று நடக்க உள்ளது. இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் நாளையும் பெங்களூரூவில் இந்த ஏலம் நடக்கிறது. 1,122 வீரர்களிலிருந்து 578 வீரர்கள் இந்த கடைசி இரண்டு நாள் ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். இதில், 244 வீரர்கள் முன்னரே விளையாடிவர்கள். இந்தியர்கள் 62 பேர். 332 வீரர்கள் முதன்முறையாக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில், 34 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும், ஏலத்தில் இருக்கும் வீரர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவுக்கும் தனித் தனியாக எலம் நடைபெறும். முன்னணி வீரர்கள் 16 பேர் `மார்க்கி' லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.