Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஐயரை தூக்கி எறிந்தார் ஜனனி...!

On July 28, 2014
Janani Iyer 30)
Share

நம்ம ஊர் நடிகைகள் யாரும் தங்களது பெயர் முன் தங்கள் ஜாதிப்பெயரை சேர்த்துகொள்வது இல்லை. ஆனால் கேரளாவில் அது தங்களது உரிமை என்பதை விட அதை பேஷனாக்கி அதற்கு முன்னுதாரணம் ஆகிவிட்டார்கள் நவ்யா நாயர், லட்சுமி மேனன், பார்வதி மேனன், ஜனனி ஐயர் ஆகியோர்..

இப்போது அந்தப்பட்டியலில் உள்ள ஜனனி ஐயர், தனது பெயரில் பின்னால் உள்ள ஐயரை தூக்கி விட்டார். இனி அவர் வெறும் ஜனனி தான். காரணம் தான் சுவராஸ்யமானது. ‘தெகிடி’ படத்தில் நடித்தபோது டைட்டில் கார்டில் ஜனனி என்று மட்டுமே போட்டுவிட்டார்கள்..

படம் ரிலீசான பின் பிரிமியர் ஷோவில்தான் அதை பார்த்திருக்கிறார் ஜனனி. அதற்கேற்ற மாதிரி படமும் ஓரளவு நன்றாக ஒடி, ஜனனிக்கு நல்ல பெயரும் கிடைக்க, இப்போது ‘ஜனனி’யே ராசியாக இருப்பதாக நினைத்து ஐயரை கட் பண்ணி தூக்கி விட்டார்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.