ஏப்ரலில் வெளியாகும் 'பாகுபலி 2' - தமிழ் திரையீட்டு உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்...

தெலுங்கு திரைப்பட பிரபல நடிகர் பிரபாஸ், ரானா டகுபதி, தமனா, அனுஷ்கா ஷெட்டி, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் மற்றும் பலர் நடித்து இரு வருடங்களுக்கு முன்பு தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த திரைப்படம் "பாகுபலி". இப்படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கினார். இப்படம் வியாபார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பெரிய வெற்றியை தொட்டது.
இப்படத்தின் இசை வெளியீட்டின் போதே, இப்படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என முன்பே தெரிவித்தார். அதன்படி இப்படத்தின் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு சென்ற வருடம் ஆரம்பித்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவுற்று விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் சில தொழில் நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 'பாகுபலி 2' படத்தின் திரையீட்டு உரிமையை பலர் வாங்க முற்பட்டு, தற்போது இப்படத்தின் தமிழ் திரையீட்டு உரிமையை தமிழ் திரையுலகின் பிரபல நிறுவனமான 'ஆஸ்கர் பிலிம்ஸ்' சுமார் ₹60 கோடி கொடுத்து இப்படத்தை வாங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்செய்தியை பற்றிய அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளிவரும். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
