Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எரும சாணி புகழ் நடிகரின் இயக்கத்தில் நடிக்கும் அருள் நிதி

On February 26, 2020
Arul Nidhi
Share

வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன்மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் மீட்சியாக இணைய உலகில் “எரும சாணி” மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் MNM Films சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் அரவிந்த் சிங் படம் குறித்து கூறியதாவது,

"இப்படம் கல்லூரி வாழ்வின் பின்னணியில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய் இந்தக்கதையை கூறியபோதே அதில் பல உற்சாகமிகு தருணங்களுடன் பரபரப்பும் நிறைந்திருந்தது. இந்தப்படத்தின் திரைக்கதையை முடித்தவுடன் நாங்கள் முதல் வேலையாக நடிகர் அருள்நிதியை தான் அணுகினோம். எப்போதும் தரமான பரிட்சார்த்த முயற்சிகளுக்கு செவி சாய்ப்பவர் அவர். “ஆறாது சினம், டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், K13” , தற்போது 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் இன்னாசி இயக்கத்தில் உருவாகி வெளிவர உள்ள பெயரிடப்படாத புதிய படம் என ஐந்து படங்கள் அவருடன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்ததில் அவரது கதைத்தேர்வு, திரைத்துறையில் தெளிந்த பார்வை மீது பெரும் மரியாதை உண்டானது. எனவே அவர் தான் இப்படத்திற்கு சரியானவர் என அவரை அணுகினோம். அவரும் விஜய் கூறிய திரைக்கதையில் உற்சாகமாகி உடனடியாக ஒப்புக்கொண்டார். இணைய உலகில் "எரும சாணி" மூலம் புகழ் பெற்ற விஜய் ராஜேந்திரன் சினிமாவில் அறிமுகமாகி நடிகர்கள், இயக்குநர்களின் முதல்தர தேர்வாக, காமிக்கல் காமெடி செல்லமாக மாறியிருக்கிறார். அவர் பெரிய திரையில் இயக்குநராக தனது பயணத்தை எனது தயாரிப்பில் தொடங்குவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.

விஜய் குமார் ராஜேந்திரன் பெரிய திரையில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் வெற்றி பெற்ற “நட்பே துணை” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது அருள்நிதி, விஜய் குமார் ராஜேந்திரன் இணையும் இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.