எமி ஜாக்சனுக்கு வெங்கட்பிரபு டெஸ்ட் வைத்தது ஏன்..?

‘ஐ’ படத்தில் நடிக்கவேண்டிய போர்ஷன்களை எல்லாம் பக்காவாக நடித்து முடித்துக்கொடுத்துவிட்டு லண்டன் போய்விட்டார் எமி ஜாக்சன்.. ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்தில் இன்னொரு கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கும் எமி ஜாக்சன் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்து சென்றார்.
காரணம் எமி ஜாக்சனுக்கு லுக் டெஸ்ட் எடுக்க விரும்பினார் வெங்கட்பிரபு. ஏனென்றால் ‘மாஸ்’ படத்தின் கதை ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர்.. இதில் எமியின் கேரக்டர் ரொம்பவே வித்தியாசமானது என்பதால் அவரின் தோற்றம் அந்த கேரக்டருக்கு எப்படி பொருந்துகிறது என்பதை பார்க்க விரும்பினார் வெங்கட்பிரபு.
இதற்காகவே லண்டனில் இருந்து வந்து சென்றாராம் எமி ஜாக்சன். அடுத்த மாதத்தில் ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்புக்காக பல்கேரியா பறக்கிறார் எமி ஜாக்சன். படத்தில் மெயின் ஹீரோயினாக நடிக்கிறார் நயன்தாரா.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
